கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா!, அமைச்சர் மலர்தூவி மரியாதை!!


செஞ்சியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி! அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு!!

சத்தியமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவமனை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி செஞ்சி இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பேரணியை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில் பெண்ணுக்கு உயர்கல்வி அளியுங்கள், குழந்தை பிறப்பை தள்ளிப் போட காப்பர்-டி அணிவிர், இளம் வயது திருமணத்தை தவிர்ப்பீர் போன்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகள் ஏந்தியவாறு மாணவர்கள் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா! அமைச்சர் மலர்தூவி மரியாதை!!

    கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் இன்று இவரது 120 வது பிறந்த நாளை முன்னிட்டு செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாண்புமிகு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம் மொக்தியார்அலி, செஞ்சி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செஞ்சி உழவர் சந்தையில், வேளாண்மை வணிகத்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம்.

  செஞ்சியில் தமிழ்நாடு அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் செஞ்சி உழவர் சந்தையில் காய்கறிகள் வரத்தினை அதிகரித்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கோ.கண்ணகி அவர்கள் கலந்து கொண்டு வேளாண்துறையில் விவசாயிகளுக்கு விதைகள், கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் மானிய விலையில் உபகரணங்கள், இயந்திரங்கள், பற்றிய விளக்கவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டையில் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா!

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை கிராமம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் சக்தி கரகம் மற்றும் உற்சவமூர்த்திகளுடன் பக்தர்கள் கோவிந்தா என்ற கோசத்துடன் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மாணவர்கள் இனி கயிறு, கம்மல் அணியக்கூடாது, சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு!

  பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டக்கூடாது என சமூக பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் போதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது.


எனவே மாணவர்களின் நலனை கருதி, ஜாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

புதியது பழையவை