செஞ்சியில் உழவர் சந்தையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம்! தோட்டக்கலை துணை இயக்குனர் பங்கேற்பு!!

 

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள உழவர் சந்தையை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் சன்க்கிழமை(16/07/2022) செஞ்சி உழவர் சந்தையில் நடைபெற்றது.

இதில் செஞ்சி உழவர் சந்தையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் நுகர்வோர்கள் வரத்து அதிகரிப்பது தொடர்பாக செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் காரல்மார்க்ஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடியை அதிகரிப்பது பற்றியும் விவசாயிகளை உழவர் சந்தையுடன் இணைத்து இடைத்தரகர்களின்றி அவர்கள் விளைவிக்கும் விலை பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்வது குறித்தும் பேசினார்.  

மேலும் இதனைத் தொடர்ந்து மேல்எடையாளம், முள்ளூர் கிராமங்களில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை நேரில் சந்தித்து உழவர் சந்தையின் முக்கியத்துவத்தையும், விவசாய அடையாள அட்டை பெறுவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இந்நிகழ்வில் செஞ்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பெ.சுகந்தி, மேல்மலையனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மீ.பிரியா, தோட்டக்கலை அலுவலர் ச.சந்தியா, வல்லம் வட்டார தோட்டக்கலை அலுவலர்(பொ) சை.சபுராபேகம், செஞ்சி வேளாண் வணிகத்துறை உழவர் சந்தை அலுவலர் கருப்பையா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை