விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாரத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் பெற்ற விவசாயிகளின் தோட்டத்தை விழுப்புரம் தோட்டக்கலை துணை இயக்குனர் காரல்மார்க்ஸ் அவர்கள் சனிக்கிழமை(16/07/2022) ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாரம் சத்தியமங்கலம் கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பாக 100% மானியத்தில் சொட்டு நீர் பாசன வசதி பெற்று கொய்யா (ரகம் L - 49) சாகுபடி செய்து வரும் கமலக்கண்ணன் விவசாயியின் தோட்டத்தில் ஆய்வின்போது சொட்டுநீர் பாசனத்தை உபயோகப்படுத்தும் முறை குறித்தும், அவற்றை பராமரிப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது, மேலும் கொய்யாவின் மகசூலை அதிகரிக்க கவாத்து(தேவையற்ற கிளைகளை அகற்றுவது) செய்வதின் முக்கியத்துவத்தையும் கூடுதல் வருமானம் பெற ஊடுபயிர் பயிரிடுவதின் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஆய்வில் செஞ்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் பெ.சுகந்தி, மேல்மலையனூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மீ.பிரியா, தோட்டக்கலை அலுவலர் ச.சந்தியா, வல்லம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் (பொ) சை.சபுராபேகம் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ராஜேஷ், சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துரையிடுக