செஞ்சியில் அரசு கலைக்கல்லூரி திறப்பு! அமைச்சர் குத்து விளக்கேற்றி துவக்கி வைப்பு!!

 

  மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 07/07/2022 வியாழக்கிழமை அன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து 20 புதிய அரசு கல்லூரிகளை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். 

அதன் ஒரு நிகழ்வான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவக்கியதை அடுத்து செஞ்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் அவர்கள் தலைமையில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக வகுப்பறைகளை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் ஆற்றிய சிறப்புரையாவது செஞ்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்பட்டதன் மூலம் செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டுகால கனவை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மெய்ப்படுத்தியுள்ளார் என்றும், செஞ்சி மற்றும் மேல்மலையனூர் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில இனி தொலைதூரம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது எனவே ஏழை எளிய மக்கள் உயர் கல்வி தடையின்றி கற்கலாம் எனவும் மாணவிகள் உயர் கல்வி கற்க நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு சிறப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1000/- தமிழக அரசால் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் என அவர் கூறினார். பின்னர் பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் செஞ்சி வட்டாட்சியர் பழனி வருவாய் ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம்.மொத்தியார்அலி நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

புதியது பழையவை