செஞ்சியில் 3726 மாணவ, மாணவிகளுக்கு, 1,89,49,964/- ரூபாய் மதிப்பிலான தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்

 

  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

 தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை வலிமைப்படுத்தும் வகையிலும், கல்விக்கான பயணம் மேற்கொள்ளும் மாணவ, மாணவியருக்கு பயன்படும் வகையில் விலையில்லா மிதிவண்டி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

 அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் நலம் மற்றும் அரசு நிதியுதவி பெறும் 135 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயின்ற 9781 மாணவர்களுக்கும், 9682 மாணவிகளுக்கும் என ஒட்டுமொத்தமாக 19,463 மாணவ, மாணவியர்களுக்கு, மாணவர்களுக்கு அளிக்கும் ஒரு மிதிவண்டியின் விலை ரூ 5175/-, மாணவிகளுக்கு அளிக்கும் ஒரு மிதிவண்டியின் விலை ரூ 4992/- என மொத்தம் ரூ 9,89,49,219/- (ஒன்பது கோடியே எண்பத்தொன்பது இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து இருநூற்று பத்தொன்பது ரூபாய் மட்டும்) மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கப்படவுள்ளது. 

 இதன் தொடக்கமாக இன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி மற்றும் மைலம் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த செஞ்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு, நகராட்சி, ஆதிதிராவிடர் நலம் மற்றும் அரசு நிதியுதவி பெறும் 29 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயின்ற 1884 மாணவர்களுக்கும், 1842 மாணவிகளுக்கும் என மொத்தமாக 3726 மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 1,89,44,964/- ரூபாய் மதிப்பிலான தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு. ரகுபதி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கோ. கிருஷ்ணபிரியா வரவேற்புரையும், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சிவகுமார் முன்னிலையும், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.எம்.மொக்தியார்அலி வாழ்த்துரையும் வழங்கினர்.

நிகழ்வின் முடிவில் செஞ்சி கல்வி மாவட்ட அலுவலர் திரு.பி.சுப்பராயன் நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

புதியது பழையவை