விழுப்புரத்தில் 75 -வது சுதந்திர தின அமுதப்பெருவிழா! மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை!!


 நாடுமுழுவதும் இன்று 75-வது சுதந்திர தின விழா அமுதப்பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்த்துறை, வனத்துறை, தீயணைப்புத் துறையினர், ஊர்காவல்படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் படையினர்,  இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசுகளை வழங்கினார்.


தொடர் நிகழ்வாக மாவட்டத்தின் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலை நிகழ்ச்சிகளம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை ஆட்சியர் மோகன் வழங்கினார். இதனைத் தொடர்ந்து,
 

அரசின் கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மகளிர் மேம்பாட்டு நிறுவனம், ஊரக வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 198 பயனாளிகளுக்கு 1கோடியே 66 லட்சத்து 85 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மோகன் வழங்கினார். மேலும்,


மாவட்ட அளவில் அரசின் பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றிய 388 பேருக்கு ஆட்சியர் மோகன் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கொளரவித்தார்.


இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் இலட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, திண்டிவனம் சார் ஆட்சியர் அமித், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விழுப்புரம் நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

புதியது பழையவை