விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை (23/09/2022) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாதந்தோரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக பங்குபெற்று தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கின்றனர்.
விவசாயிகளின் குறைதீர் கூட்டதில் துறைசார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விவசாயிகளின் குறைகளை தீர்த்து வைப்பது வழக்கம்.
அத்ந வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். எனவே இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதகள் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து சரிசெய்து கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக