செஞ்சி அடுத்த அப்பம் பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமினை அமைச்சர் துவங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து அப்பம்பட்டு அல் இஷ்சான் டிரஸ்ட் மசூதி வளாகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்நல அறக்கட்டளை மற்றும் சங்கம், அப்பம் பட்டு சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் (PIMS) மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண் சிகிச்சை, அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் மற்றும் தோல் மருத்துவ குழுக்கள் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும் சர்க்கரை நோய் ரத்தக்கொதிப்பு பரிசோதனையும், மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகளை புதுவை பீம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல இலவச பேருந்து வசதியும், கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சை செய்பவருக்கு பிரத்தியேக வாகனத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இலவசமாக செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் PIMS மருத்துவக் குழுவினரால் மருத்துவ முகாமில் சுமார் 350 நபர்கள் சிகிச்சை பெற்றனர்.
தலைமை Ln.M.நூருல்லாஹ் மாநில அமைப்பு செயலாளர் வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கம், வரவேற்புரை S.சையத் உஸ்மான்
அப்பம்பட்டு சையத் ஸ்வீட்ஸ் முட்டை மிட்டாய் உரிமையாளர் மற்றும் அல் இஷ்சான் டிரஸ்ட் பள்ளி நிர்வாகத்தினர், சிறப்புரை நம்புதாளை பாரீஸ் மாநில பொருளாளர், அப்துல் ரகுமான் மாநில ஊடகப்பிரிவு செயலாளர், சின்னராசு விழுப்புரம் மாவட்ட செயலாளர், தமிழ்.மதியழகன் மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர்.
கருத்துரையிடுக