திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து புற்றுநோய்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.இந்துமதி அவர்கள் தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் லயன்.நூருல்லா, மாவட்டத் துணைத் தலைவர் கே.ஏ.எஸ் சதாம் உசேன், மாவட்ட ஊடக செயலாளர் தமிழ்.மதியழகன், வெள்ளிமேடு பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் மேனகாசரவணன் மற்றும் மருத்துவ குழுவினர்களால் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெறுவது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
மேலும், நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கத்தின் சார்பில் முந்திரி, பாதாம், கருப்பு திராட்சை, எள், வேர்க்கடலை, பயித்தம் பருப்பு, கொண்ட கடலை, திராட்சை பழம், கேரட், நெல்லிக்கனி உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் செங்கேணி மற்றும் அவிநாசிபிரபு, பகுதி சுகாதார செவிலியர் தேன்மொழி, நிலைய செவிலியர் சூர்யா, மருந்தாளுநர் பேரரசி, அங்கனவாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், மருத்துவ பணியாளர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக