விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் இன்று (09/11/2022) தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விழுப்புரம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் பருவநிலை மாற்றத்திற்கு உகந்த மீள் தன்மையுள்ள மாங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்கமான, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின், "நிக்ரா" என்ற
பருவ கால மாற்றத்திற்கு உகந்த தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் மயிலம் வட்டாரத்தில் உள்ள நடுவனந்தல் கிராம மக்களுக்கு வீட்டுக்கு ஒன்று என்ற அளவில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் தலைமையில் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் முனைவர் ஸ்ரீதர் அவர்கள் 400 மாங்கன்றுகள் வழங்கினார். மேலும் பள்ளி வளாகத்தில் மாங்கன்றுகள் நட்டனர். மாங்கன்றுகளை எவ்வாறு நடவேண்டும், பராமரிப்பு செய்ய வேண்டும் என்றும் விளக்கினார்.
இந்நிகழ்வில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் இணை பேராசிரியர் முனைவர் கோமதி, முனைவர் குருநாதன், நடுவனந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோபால கண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெயசித்ராவெங்கடேசன், ஊராட்சி செயலர் குமார், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக