அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவையின் விழுப்புரம் மாவட்டம் சார்பாக நவம்பர் 7-ம் நாள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ராஜகுலத்தோராகிய எங்களுடைய சமுதாய மக்கள் தமிழகம் முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் உள்ளோம், இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் எங்களது சமுதாய மக்களின் சார்பாக ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளோம்.
எங்களது சாதி பெயரை (வண்ணார்) என்பதை தொழில் பெயரோடு இணைத்து களங்கம் விளைவிக்கும் வண்ணமாக அழைப்பது தவறு என்பதையும், தொழில் வேறு சாதி வேறு என்ற அடிப்படையிலும், அது மட்டும் அல்லாமல் எங்களது முன்னோர்கள் பலர் பல பகுதிகளில் ஆட்சி செய்த வரலாறும் உண்டு எனவே,
தமிழக அரசின் அரசாணைப்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வரிசை எண் 38-ல் உள்ளபடியும், ஒன்றிய அரசின் அரசாணைப்படி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வரிசை எண் 156-ல் உள்ளபடியும் இருக்கக்கூடிய "ராஜகுல" என்ற உட்பிரிவை ராஜகுளத்தோர் என்ற பெயரில் எங்களை அழைக்கவும் அதற்கான அரசாங்க சான்றிதழ் வழங்கவும் வலியுறுத்தி ஒட்டுமொத்த எங்களுடைய சமுதாய மக்களிடம் கையொப்பம் பெற்று விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக