செஞ்சியில் பஜார் வீதிகளில் உலா வரும் மாடுகள்! அச்சத்துடன் வாகன ஓட்டிகள்!!

 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தினந்தோறும் பஜார் வீதிகளில் மாடுகள் உலா வந்துகொண்டே இருப்பதால் பஜார் வீதிகளில் மாடுகளால் விபத்துகள் ஏற்படும் நிலை, இதனால் உயிர்ச்சேதம் ஏற்படுமோ என அச்சத்துடன் வாகன ஓட்டிகள்...

இது பற்றி பலமுறை செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிட்டாலும், சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் இந்த அவல நிலைக்கு எவ்வித தீர்வும் இல்லை?

இதற்கு தீர்வு காணும் வகையில் மாடுகளின் உரிமையாளர்களுக்கு செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தும் நிர்வாகத்தை அலட்சியப்படுத்தும் மாட்டின் உரிமையாளர்கள். அது மட்டுமல்லாது பஜார் வீதிகளில் உலா வரும் மாடுகளின் மீது வாகனங்கள் மோதி விட்டால் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை ஒருபுறம்.

எனவே செஞ்சி பஜார் வீதிகளில் உலா வரும் மாடுகளினால் விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், வாகன ஓட்டிகள் அச்சமின்றி வாகனங்களை இயக்கவும் செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் என்கின்ற எதிர்பார்ப்புடன்... வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்? குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகின்றனர்.

செய்தியாளர்:                           மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை