அக்னியாய் விளங்கும் அண்ணாமலையாருக்கு அரோகரா...!, திருவண்ணாமலையில் 2688 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்!!

 

   திருவண்ணாமலையில் உலக புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது பல லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. 

அந்தவகையில், இவ்வாண்டு கடந்த நவம்பர் 27ஆம் தேதி(கார்த்திகை 11ம் நாள்) கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் சிறப்பு நிகழ்ச்சியாக டிசம்பர் 3ஆம் தேதி(கார்த்திகை 17ம் நாள்) 

பஞ்சமூர்த்திகள் மகாரதங்கள் தேரோட்டம் நடைபெற்றது. 

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி(கார்த்திகை 20ம் நாள்) இன்று அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் அதிகாலை 4 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 

பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், மாண்புமிகு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, மாலை ஆலயத்தினுள் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே அர்த்தநாரியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஆலயத்தின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 688 அடி உயரமுள்ள, 

அக்னியாய் உருவான மலையின் மீது பஞ்சலோகத்தால் ஆன 300 கிலோ எடை கொண்ட மகா தீப கொப்பரையில், 650 கிலோ நெய்யிட்டு, 1,150 மீட்டர் திரியில் மாலை 6.01 மணிக்கு பல லட்சம் பக்தர்களின் அண்ணாமலைக்கு அரோகரா, திரு அண்ணாமலைக்கு அரோகரா கோசத்துடன் மகாதீபம் ஏற்றப்பட்டது.

செய்தியாளர்:                             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை