விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு, அவசர வாகன ஊர்தி செல்ல இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது குறித்தும், புற நோயாளிகள் கழிப்பறை அவலநிலை குறித்தும், அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையின் வாயிலாக பலமுறை செய்தி வெளியிட்டு வந்தோம்.
இதன் அடிப்படையில் செஞ்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் அவசர வாகன ஊர்திகள் இடையூறு இல்லாமல் செல்ல காவலாளி (வாட்ச்மேன்) நியமிக்கப்பட்டு சரிசெய்துள்ளனர்.
இதனால் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி.. இருப்பினும், புற நோயாளிகள் கழிப்பறை சரி செய்யப்படாமல் உள்ளது இதனையும் விரைந்து சரி செய்யுமா? செஞ்சி அரசு மருத்துவமனை நிர்வாகம்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக