விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலை இந்தியன் வங்கி அருகில் செஞ்சி வட்டாரக்குழு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் செஞ்சி வட்ட குழு தலைவர் கோ.மாதவன் தலைமையில் "நாடு இது தமிழ்நாடு வந்தேரியே வெளியேறு; அரசியல் சாசன சட்டத்தை மதிக்காத தமிழக ஆளுநரே வெளியேறு;" என கோஷத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் த.க.வி.ச. தலைவர் டி.ஆர்.குண்டு ரெட்டியார் (செம்மேடு சர்க்கரை ஆலை), த.வி.ச. வட்ட பொருளாளர் ஜி.சபாபதி முன்னிலை வகித்தனர், த.வி.ச. வட்ட செயலாளர் வி.சிவன் வரவேற்புரை வழங்கினார் மற்றும் த.க.வி.ச. மாநில தலைவர் எஸ்.வேல்மாறன், த.வி.ச. மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், ம.தி.மு.க. மா.பொ. செயலாளர் எ.கே.மணி, ம.நே.ம.கட்சி மாவட்ட தலைவர் எஸ்.சையத்உஸ்மான், வி.சி.க. நகர செயலாளர் செஞ்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எ.கோவிந்தராஜ், திராவிட கழக மாவட்ட தலைவர் துரை.திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் சே.வ.கோபண்ணா, டபிள்யு. ஆல்பர்ட் வேளாங்கன்னி ப.இ.பா.சங்கம், எ.ஜோலாதாஸ் இ.தே.காங்கிரஸ் விவசாய பிரிவு, சு.மழைமேனிபாண்டியன் அம்பேத்கர் மக்கள் கட்சி, SDPI மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.அபுபக்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக்குழு என்.சந்திரசேகர் நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக