விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சனவரி 21 அன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணதாஸ் முன்னிலை வகிக்க வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையேற்றார்.
முகாமில் செஞ்சி செக்கேவர் நிறுவனத்தின் தன்னார்வலர்கள் மூலம் 250 பழங்குடியினர் குடும்ப அட்டைகளை வறுமைகோட்டிற்கு கீழ் (PHH-AAY) உள்ளவர்களாக மாற்றக்கோரி விண்ணப்பங்கள் தயார் செய்யப்பட்டு மேல்மலையனூர் வட்டாட்சியர் அலெக்சாண்டர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செக்கோவர் இயக்குனர் அம்பிகா சூசைராஜ் அவர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் ஜெயசீலன், ரவீந்திரன், ராஜாராமன், அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக