வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் அரசு சார்பில் மரபு நடை கலை விழா செஞ்சிக்கோட்டையில் இன்று தொடங்கியது.
இவ்விழா 07/01/23 முதல் 14/01/23 வரை நடைபெற உள்ள நிலையில் செஞ்சிக்கோட்டையின் வரலாற்றை தமிழக மக்கள் மட்டும் அல்லாது மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களையும் ஈர்க்கும் வகையில் நமது பாரம்பரியம், வரலாறு மற்றும் நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செஞ்சிக்கோட்டையில் முதல் முறையாக மரபு நடை கலை விழா நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வரலாற்று சிறப்புமிக்க இராஜா தேசிங்கு ஆண்ட செஞ்சிக்கோட்டையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமையில் செஞ்சிக்கோட்டையின் பாரம்பரியத்தை உணர்த்தும் மரபு நடை கலை விழாவினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைகளான மல்லர் கம்பம், சிலம்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட செல்வங்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
உடன் மாவட்ட கண்காணிப்பு/ திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளர் ஹர்ஷகாய் மீனா இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் இ.ஆ.ப., திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா தேஜா ரவி இ.ஆ.ப., மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள், தொல்லியல் துறை அலுவலர்கள், இராஜா தேசிங்கு பரம்பரையைச் சேர்ந்த பொந்தில் வம்சத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக