இந்தியாவின் ஒற்றுமையையும், இயற்கை வளங்கள் பாதுகாக்கும் வகையில், செஞ்சியில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இந்தியாவின் ஒற்றுமைக்காகவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கும் வகையில் மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

செஞ்சி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் செஞ்சி மற்றும் தீவனூர் சி.பி.எஸ்.சி. தரணி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் தண்டபாணி, கன்னிகா சாட்டபிள் டிரஸ்ட் & மொபைல்ஸ் ரமேஷ் பாபு துவக்கிவைத்தனர்.

ஓட்டப்பந்தயம் மேலச்சேரியில் தொடங்கி சிங்கவரம், கிருஷ்ணாபுரம், தேசூர்பாட்டை, திருவண்ணாமலை சாலை, காந்தி பஜார் வழியாக சிறுகடம்பூர் தரணி இன்டர்நேஷனல் பள்ளி வரை முடிவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் விரைவில் பரிசுகள் அளிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் விழுப்புரம் மாவட்ட துணைநிலை ஆளுநர் இளங்கோவன், செஞ்சி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டை ராஜ் மற்றும் விர்ச்சுவல் மீடியா ஒருங்கிணைப்பாளர் அருண் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்:                           மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை