விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகரின் ஈசானியமூலையில் அமைந்துள்ள சித்தர்கள் வழிபட்ட அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தில் (பிப்ரவரி 17) நேற்று உலக நன்மை வேண்டியும், ஆலயம் புனரமைத்து குடமுழுக்கு நடைபெற வேண்டியும் மகா திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிளக்கிற்கு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியினை குமுதம் பக்தி, Grt ஜுவல்லரி மற்றும் ஆலய நிர்வாக குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக