செஞ்சி அரசு மருத்துவமனையில் மாத்திரைகள் இல்லை, அவதிக்குள்ளாகும் மனநல நோயாளிகள்! கண்டுகொள்ளுமா சுகாதாரத்துறை..?


 செஞ்சி அரசு மருத்துவமனையில் மனநலம் மற்றும் நரம்புகள் சம்பந்தமான நோயாளிகளுக்கு சில மாத்திரைகள் இல்லாததால் நோயாளிகள் அவதி.. 

செஞ்சி அரசு மருத்துவமனையில் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே மனநலம் மற்றும் நரம்புகள் சம்பந்தமான நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளிகளின் நிலை அறிந்து அவர்கள் நலம் பெற என்னென்ன மருந்துகள் வாங்கலாம் என குறிப்பிடுகின்றனர் ஆனால் அவர்கள் குறிப்பிடும் மருந்துகளில் சில மருந்துகள் மருத்துவ மருந்தகத்தில் இல்லாத நிலை நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்தவகையில், தற்போது செஞ்சி அரசு மருத்துவமனையில் மனநலம் மற்றும் நரம்புகள் சம்பந்தமான சில மருந்துகள் இல்லாத நிலை நிலவுகிறது. மேலும்,

செஞ்சி அரசு மருத்துவமனை மருந்தகத்தில் இல்லாத மாத்திரைகளை நோயாளிகள் வெளியே அதாவது தனியார் மருந்தகங்களில் அந்த மாத்திரைகள வாங்கிக் கொள்ளுமாறு கூறுகின்றனர்.  மீண்டும் இந்த மாத்திரைகள் எப்பொழுது கிடைக்கும் என கேட்டதற்கு ஒரு மாத காலத்திற்குப் பிறகு தான் கிடைக்கும் என செஞ்சி அரசு மருத்துவமனை மருந்தகம் கூறுகிறது.

பெரும்பாலான மக்கள் தனியார் மருத்துவமனை, மருந்தகங்களுக்கு செல்ல இயலாத நிலையில் நோயாளிகள் அரசு மருத்துவமனை நாடுகின்றனர் தற்பொழுது அரசு மருத்துவமனையிலே மருந்துகள் இல்லை, இந்நிலை தொடர்ந்தால் நோயாளிகள் நிலை என்ன..?

இதை தமிழக அரசும், சுகாதார துறையும் சரி செய்யுமா? அவதியுறும் நோயாளிகளின் எதிர்பார்ப்பு.

செய்தியாளர்:                            மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை