செஞ்சியில் முதல்வர் ஸ்டாலின் 70 வது பிறந்த நாளையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் தமிழக முதலமைச்சரின் 70 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் விழாவையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாட்டினை திமுக நகர செயலாளர் காஜா நஜீர் தலைமையில் செய்திருந்தனர்.

செய்தியாளர்:                            மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை