விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் எதிரில், செஞ்சி நகர பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி ஏற்பாட்டில் 9 இலட்சம் மதிப்பீட்டில் 40 இடங்களில் 88 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியினை துவக்க துவக்கிவைத்தார்.
இந்நிகழ்வில் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, உதவி ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன், சிபிசிஐடி தலைமை காவலர் முனுசாமி, தலைமை காவலர் ஜெயசீலன், காவலர்கள் கோபி, வேலு, சிசிடிவி கேமரா நிபுணர் சதீஷ் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக