விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (21/03/2023) எண்ணும் எழுத்தும் கற்றல் திருவிழா நடைபெற்றது.
கொரோனாவால் பல நாட்கள் பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்ய 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டம்.
அந்தவகையில் கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் கற்றல் திருவிழாவில், பள்ளி மாணவ மாணவியர்கள் கற்றல் திறனை பல்வேறு வகையில் தங்களது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே வெளிப்படுத்தி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கீதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சதீஷ், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக