செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம்! 4 கிராம ஊராட்சிகளுக்கு டிராக்டர் வழங்கிய அமைச்சர் மஸ்தான்!!

 

தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 24.81 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்களை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் திடக்கழிவு மேலாண்மையில் தன்னிறைவு அடையச் செய்யவும், கிராம ஊராட்சிகளில் வீடுகள், கடைகள், மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை, குப்பைகளை சேகரிக்கும் கூடத்திற்கு கொண்டு செல்வதற்கு தலா ரூ: 6,20,300/- மதிப்பில், முதற்கட்டமாக 

மழவந்தாங்கள், கணக்கன்குப்பம், தேவதானம்பேட்டை, ஆலம்பூண்டி ஆகிய 4 கிராம ஊராட்சிகளுக்கு ரூ: 24 லட்சத்து 81 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பீட்டிலான டிராக்டர்களை ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார். உடன்

செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                            மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை