எஸ்.ஐ.வி.இ.டிரஸ்டின் தலைவர் திரு.C.இராமகிருஷ்ணன், டிரஸ்ட் செயலர் திரு. C. மாடசாமி, டிரஸ்ட் பொருளாளர் திரு. D. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியின் தலைவர் திரு. S.P. குப்புசுவாமி, செயலர் திரு.P. சுந்தரராமன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் K. திருசங்கு, இயக்குநர் முனைவர் R. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின்
மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் K.
பார்த்தசாரதி அவர்களும்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
உறுப்பினர் மற்றும் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக்குழுவின் மேனாள் உறுப்பினர் பேராசிரியர் K. ஜோதி சிவஞானம் அவர்களும் சிறப்பு
விருந்தினர்களாகப் பங்கேற்று, மாணவர்களுக்கு, பட்டங்கள்
மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
இதில் மொத்தம் 1285 பட்டதாரிகளில் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 17 மாணவர்களும், 77 முதுகலைப் பட்டதாரிகளும் அடங்குவர். இதில் விலங்கியல் துறை மாணவி செல்வி M. கிருஷ்ணவேணி பல்கலைக்கழகத் தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
தலைமை செய்தியாளர் R.வெங்கடேஷ்
கருத்துரையிடுக