செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் ஏற்பாட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, கிராம ஊராட்சி மன்றங்களுக்கு கணினி மற்றும் டிராக்டர் வழங்குதல் போன்ற ரூ: 96,40,120/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் (ம) ஊராட்சி மன்ற தலைவர்கள் பெயர் பலகை மற்றும் 19 லட்சம் மதிப்பீட்டில் வல்லத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்த அமைச்சர்
66 ஊராட்சிகளுக்கு தலா 89,320/- ரூபாய் மதிப்பில், 58 லட்சத்து 95 ஆயிரத்து 120 ரூபாய் மதிப்பிலான கணினி, யுபிஎஸ், பிரிண்டர்கள். மேல்சேவூர், வல்லம், வீரணாமூர் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தலா 6,15,000/- மதிப்பில், 18 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான டிராக்டர்கள் என மொத்தம் 96 லட்சத்து 40 ஆயிரத்து 120 ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்.
இந்நிகழ்வில் உடன் வல்லம் ஒன்றிய குழு துணை தலைவர் மல்லிகா அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலம்புசெல்வன், ஆனந்ததாஸ், மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக