5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!!

 

தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில், 8,000 நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது மே, 5-ம் தேதி போக்குவரத்து துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு பேருந்தில் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

மேலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணிப்பதை தடுப்பதற்கு அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அரசு பேருந்துகளில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 3 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமின்றி பயணித்து வரும் நிலையில் வயது வரம்பு 5ஆக அதிகரித்துள்ளது. 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் அரை கட்டணம் செலுத்தி பயணிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செய்தியாளர்:                மதியழகன்.  ‌

Post a Comment

புதியது பழையவை