பொதுவாக அரசு பள்ளி என்றாலே அலட்சியமாய் புரம்தள்ளி போகும் மனபான்மையை வளர்த்துவிட்டது ஆங்கில கல்வி மோகம்
பணம் கொடுத்து படிக்க வைக்கும் கல்வி சுதந்திரமான கல்வியா? என்றால் இல்லை என்ற கேள்வியே எழும் தனியார் பள்ளியில் பயிலும் பிள்ளைகளுக்கு எப்போதுமே கல்வி தினிப்பும் கசப்பும் என்றாகிவிட்டது ஏன் என்றால் தன் பள்ளி முதன்மை பள்ளியாக வர வேண்டும் என்பதற்க்காக அங்கே பாடங்கள் தினிக்கபடுகின்றன. படிப்பை முடித்துவிட்டு கலைப்புடனே வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு வீட்டிலிலும் பாடம் பாடம் என்பதால் மன உச்சலுக்கு ஆளான பிள்ளைகள் எத்தனையோ உண்டு இதற்க்கு காரணம் பெற்றோர்கள். ஆம் தான் செலவிட்ட பணம் வீணகிவிடகூடாது என்பதற்க்காக கச்சைகட்டி நிற்க்கு பெற்றோர்கள். ஒருபுறம் இருக்க பெற்றவர்களையும் மற்றவர்களையும் அடுத்த நகர்வுக்கு சிந்திக்க விடாமல் நம்மையே சுற்றிவரும் தனியார் பள்ளி விளம்பரங்கள். அரசு பள்ளிகல்வி துறை மூலம் வெளியிடபடும் எந்த விளம்பரங்களையோ செய்திகளையோ நாம் ஒரு போதும் பார்பது கிடையாது. அரசு என்ன தான் சொல்ல வருகிறது என்பதை செவிமடுத்து கேட்பதும் கிடையாது. ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் பொதுவாக அரசு பள்ளிகளுக்கு அரசாங்கம் பல சலுகைகளை செய்துகொண்டுதான் இருக்கிறது பாடபுத்தகம் சீருடை, காலணி, இன்னும் ஏராளமான சலுகைகள் கொடுத்து கொண்டுதான் இருக்கிறது. நாம் இவற்றை பயன்படுத்வது கிடையாது அதனால் நமக்கு தெரியாமலேயே போகின்றது. அரசு பள்ளி ஆசிரியரை மிரட்டும் தைரியம் உள்ள நாம் தனியார் பள்ளி நிர்வாகத்தை ஏன் எந்த கேள்வியை கேட்பது கிடையாது அரசு ஊழியர் என்றால் என் வரிபணத்தில் சம்பளம் வாங்கிகொண்டு என்று வாய்க்கு வந்தார்போல் மிரட்ட தெரிந்த நமக்கு தனியார் பள்ளிகளுக்கும் நாம்தான் பணம் கொடுக்கிறோம் என்பதை ஏன் மறந்து போனீர்கள் நம் உழைப்பை சிறுக சிறுக சுரண்டும் தனியார் பள்ளியை கேள்வி கேட்கும் உரிமை உண்டு என்பதை ஏன் மறந்து போனீர்கள் அரசு அலவலகத்தினுள் நேராக செல்ல முடிந்த உங்களால் தனியார் பள்ளி கேட் வரை மட்டுமே செல்லமுடியும். உங்கள் பிள்ளைகளை பார்பதற்க்கு நீங்கள் அனுமதி பெற வேண்டிய அவலநிலை உள்ளது. என்பதை ஏன் உணரமுடியவில்லை அவர்கள் உங்களை பதட்டநிலையிலேயே வைத்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு பணம் அரசு தனியார் கல்வி கூடங்களுக்கு பல விதிமுறைகளையும் விதித்துள்ளது எதையாவது தெரிந்துகொண்டோமா? இல்லை மிரட்டும் தனியார் பள்ளியிடம் இருந்து விலகி அரசு பள்ளியில்தான் சேர்த்துவிட்டோமா? நாம் எல்லோரும் தனியார் தனியார் என்ற மேகத்தில் ஓடுவதால்தான் இன்று பல அரசு நிறுவாகங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் அவல நிலைக்கு தள்ளபட்டு இருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்
இருப்பினும் நாங்களும் எதிலும் சலைத்தவர்கள் அல்ல என பல சாதனை நிகழ்வுகளை நடத்தி வரும் அரசு பள்ளி மாணவர்களை ஊடக செய்தி வழியாகவும் சமுக ஊடக வழியாகவும் பார்த்து வருகிறோம் அந்த வகையில் (19 - 05 - 2023 அன்று வெளியான பத்தாம் வகுப்பு பனிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் பல அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளதுசெங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரியில் வசித்துவரும் திரு. சந்திரசேகர் இவர் வீடு வீடாக கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் கூலி தொழிலாலி இவர் கடின உழைப்பின் முலம் தன் பெண்பிள்ளையை திருவஞ்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கவைத்து வந்தார் அப்பாவின் கடின
உழைப்பையும் அம்மா பாலசுந்தரியின் அன்பையும் ஆசிரியர்களின் ஊக்கத்தையும் கருத்தில்கொண்டு கவனமுடன் படித்துவந்தார் பிரியதர்ஷினி நடந்து முடிந்த பத்தாம்வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியாகின எல்லோருக்கும் இருக்கும் பதட்டநிலை பிரியதர்ஷனிக்கும் இருந்தது அப்பாவின் கையை இருக பிடித்துகொண்டு அப்பா நா பாஸ் ஆகிடுவ என அப்பாவிற்க்கு ஆருதல் சொல்லிகொண்டுருந்தார் பிரியதர்ஷ்னி. பிரியதர்ஷ்னியின் கைகள் பதட்டநிலையை சொல்லவில்லை என்றாலும் மனதுக்குள் ஒரு பதட்டம் இருந்துகொண்டுதான் இருந்தது. இருப்பினும்பெற்றவராயிற்றே மகளின் மனநிலையை புரிந்துகொண்ட அப்பா சந்திரசேகர் கவலபடாத செல்லம் நீ பாஸாகிடுவ என்று தைரியம் சொல்லிகொண்டிருக்க செல்போன் மணி அடிக்க தொடங்கியது செல்போனை எடுத்து ஹலோ
என்றார் மருமுனையில் இருந்து வந்த நண்பரின் குரல் வாழ்த்துக்கள் சந்திரசேகர் பாப்பா பாஸ்ஸாகிட்டா பாஸ்மட்டுமில்ல அந்த பள்ளியின் முதல் மதிப்பெண் மாணவியும் பாப்பாதா என்ற செய்திகேட்டு சற்று நேரம் மகிழ்ச்சியில் உரைந்துபோனார் தன் தந்தையின் கடும் உழைப்பிற்க்கு பள்ளியின் முதல் மதிப்பெண் மாணவி என்ற பரிசை தந்த மகள் என்ற செய்திகேட்டு அமுதம்
ரிப்போர்ட்டர் பத்திரிகை ஆசிரியரும் நிறுவனருமான திரு. வாஞ்சிநாதன் அவர்கள் நேரில் சென்று இனிப்புடன் வாழ்த்துதலையும் பாராட்டையும் தெரிவித்தார்
உடன் அமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கையின் இணை ஆசிரியர் ஜெ. அமல்ராஜ் நிருபர் மகேஷ், குமரன் ஆகியேர் தங்கள் வாழ்த்துதலை தெரிவித்தனர்
கருத்துரையிடுக