விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூா் கிராமத்தில் அமைந்துள்ள பிரிசித்தி பெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகா் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு வியாழக்கிழமை (25/05/2023) அன்று பாலாலயம் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த பால்யத்தில் இக்கோவிலின் மூலவரான சுயம்பு பொய்யாமொழி விநாயகப் பெருமானைத் தவிா்த்து கோவிலைச் சுற்றி உள்ள பரிவார மூா்த்திகள், கோபுரம், கொடிமரம், ஜோதிலிங்கம், நந்திபகவான், தட்சிணாமூா்த்தி, துா்க்கை அம்மன், நாகராஜா், யானை வாகனம், நந்தி வாகனம், எலிவாகனம், பலிபீடம் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆகம விதிகளின்படி பாலாலயம் செய்யப்பட்டது. முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
பாலாலயம் ஏற்பாடு கோயில் பரம்பரை அறங்காவலா் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவா் மணிகண்டன். இந்நிகழ்வில் அரங்காவலர், நிர்வாகிகள், உபயதாரர்கள், ஆன்மீக பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் உபயதாரா்கள் மற்றும் பக்தா்களின் நன்கொடைகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் பரம்பரை அறங்காவலா் சகுந்தலா அம்மாள் தெரிவித்தாா்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக