Top News

மாலத்தீவில் உயிரிழந்த ஐயப்பன் குடும்பத்திற்கு, வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கம் சார்பில் 1.42 லட்சம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற 1432-ம் பசலி ஆண்டு (ஜமாபந்தி) வருவாய் தீர்வாயம் நிறைவு நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கம் சார்பில் மாலத்தீவில் உயிரிழந்த ஐயப்பன் குடும்பத்திற்கு 1,42,100/- ரூ அமைச்சர் மூலம் வழங்கப்பட்டது.

வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கத்தின் சார்பில்  மாலத்தீவில், சங்கத்தின் மாலத்தீவு ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஷேக் பரீத் சலீம் அவர்களின் பெரும் முயற்சியில் மாலத்தீவில் கடந்த 10-05- 2023 அன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்த கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த ஐயப்பன் (த) முத்துசாமி (வ) 31 அவருடைய குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி முன்னிலையில், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர் திருகரங்கலாள் 1,42,100/- ரூபாய்  உயிரிழந்த ஐயப்பன் அவர்களின் தாய் கொளஞ்சி, சகோதரி ராதா மற்றும் உறவினர் கார்த்திக் அவர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, வருவாய் தீர்வாய அலுவலர் (ம) விழுப்பும் உதவி ஆணையர் (கலால்) சீ.சிவா, வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் Ln. LKM. நூருல்லா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சின்ராசு, மாவட்டத் துணைத் தலைவர் சதாம் உசேன், மாவட்ட ஊடக செயலாளர் தமிழ். மதியழகன் மற்றும் மாலத்தீவைச் சார்ந்த பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                   மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை