விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளனர்.
செஞ்சி வட்டம் மொடையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் (35) என்பவர் இரு கால்களும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் எலும்பு மருத்துவர் சுரேஷ்குமார் தனியார் மருத்துவமனைக்கு ஈடாக ஆர்த்ரோஸ்கோப் முறையில் அதிநவீன அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்துள்ளார்.
இதன் காரணமாக மருத்துவருக்கும் மருத்துவ குழுவினருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக