தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள்! அச்சத்தில் வாகன ஓட்டிகள்!!

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுகா அகரம்தென் பிரதான சாலையில் கால்நடைகளால் எற்படும் விபத்து கண்டுகெள்ளாத அரசு அதிகாரிகள்?

அகரம்தென் இந்திரா நகரில் உள்ள பாரத் பல்கலைக்கழகம் கல்லூரின் முன்பும், அகரம்தென் பிரதான சாலையின் குறுக்கே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிவதால் தினமும் விபத்து ஏற்படுகிறது. 

குறிப்பாக இரவு நேரங்களில் இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததல், அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் பலர் பலத்த காயமடைகின்றனர். மேலும், இங்கு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

நிருபர்: தா. ஜேக்கப்,

புகைப்பட கலைஞர்: ம.சந்திர சேகர்.

Post a Comment

புதியது பழையவை