செஞ்சியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, செஞ்சி டி.எஸ்.பி கவினா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சர்வதேச போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நாளை முன்னிட்டு செஞ்சி காவல் துறை சார்பில் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் விழிப்பு ஊர்வலம் நடைபெற்றது.

விழிப்புணர்வு ஊர்வலத்தை செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கவினா கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களை தவிர்ப்போம்! போதையில்லா சமுதாயத்தை காப்போம்! உள்ளிட்ட வாசகங்களை கோசமிட்டும், பதாகை ஏந்தியவாறு காந்தி பஜார் வீதிகளில் ஊர்வலமாக வந்து மக்களுக்கு போதைப் பொருள் தடுப்பது குறித்து விழிப்புனர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சி இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி, செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பண்டை ராஜ், காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன், உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்பரமணியன், ஆசிரியர் குமரவேல் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                    மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை