வெள்ளிமேடு பேட்டை அரசு பள்ளியில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்! அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.

 

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் மேற்கு ஒன்றிய திமுக மற்றும் புதுச்சேரி பிம்ஸ் (PIMS) மருத்துவமனை இணைந்து வெள்ளிமேடு பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 26 அன்று நடைபெற்ற மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் ராஜாராம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மாசிலாமணி, சீத்தாபதி, சொக்கலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், நகர செயலாளர் ஆசிரியர் கண்ணன், ஒலக்கூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் சொக்கலிங்கம், வெளிநாடுவ வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளையின் மாநில அமைப்பு செயலாளர் லயன் நூருல்லா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை இளைஞரணி நிர்வாகி KGP. மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தார்.

செய்தியாளர்:                            மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை