குண்டும் குழியுமாக காணப்படும் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை, உயிர்ப்பலிக்கு முன் விரைந்து நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலை துறை?

 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி செல்லும் காமராஜர்புரம் பகுதியின் பிரதான சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சாலையின் பக்கவாட்டில் சமையல் எரிவாயு பைப்லைன் பள்ளங்கள் தோண்டி சரியாக சீரமைக்காமல், அபாயகரமான போக்குவரத்து சாலையாக மாறியுள்ளது.

இதனால், அப்பகுதியில் தினமும் விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெருமளவில் காயங்கள் ஏற்படுகின்றன. உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படும் முன் தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையை சீரமைக்குமா நெடுஞ்சாலை துறை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் : தா. ஜேக்கப்,

புகைப்பட கலைஞர்: ம. சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை