விழுப்புரம்: குல்பி ஐஸ் சாப்பிட்ட 85 பேர் வாந்தி, மயக்கம்... உடல் நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த மைலம் MLA

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா முட்டத்தூர் கிராமத்தில் 18 /08 /2023 அன்று இருசக்கர வாகனத்தில் நபர் ஒருவர் மாலை நேரத்தில் குல்பி ஐஸ் விற்று வந்துள்ளார். அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குல்பி ஐஸ் வாங்கி சாப்பிட்டுள்ளனர். 

அன்று இரவு 10 மணி அளவில் குல்பி ஐஸ் சாப்பிட்டவர்கள் திடீரென ஒவ்வொருவராக வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட 3 வயது முதல் 15 வயது 50 பள்ளி சிறுவர்கள் உட்பட 85 பேர் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கஞ்சனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குல்பி ஐஸ் விற்றவர் ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(45) என்பது தெரிய வந்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மயிலம் சட்டமன்ற உறுப்பினர் C.சிவகுமார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவரிடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

செய்தியாளர்:                             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை