செஞ்சி அருகே கல்லாங்குப்பம் கிராமத்தில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 15-க்கும் மேற்பட்டோர் காயம்.
செஞ்சியில் இருந்து மேல்சேவூர், ரெட்டணை, விக்கிரவாண்டி வழியாக விழுப்புரம் செல்லும் ஸ்ரீ அமுதா என்ற பெயரில் இயங்கும் தனியார் பேருந்து இன்று நண்பகல் 12 மணியளவில் செஞ்சி அருகே மேல்சேவூர் மதுரா கல்லாங்குப்பம் கிராமத்தில் சாலையில் உலர்த்திய அவுரி தழையின் மீது சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்ட பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை கிராம பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி நேரில் சென்று விசாரணை.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக