விழுப்புரம் மாவட்டம் மைலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுநந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் 18 வது, பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் 16 - 22 ஆகஸ்ட் 2023 நிகழ்ச்சி நடைபெற்றது.
பார்த்தீனியம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ். துரைசாமி நாளைய தலைமுறைகளான பள்ளி மாணவர்களுக்கு பார்த்தீனியமும் அதனுடைய தன்மைகளும் அவை பரவுவதற்கான காரணங்கள் பார்த்தீனியத்த்ல் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கால்நடைகளுக்கு, வேளாண் பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அவற்றால் ஏற்படும் சுற்றுப்புறச் சீர்கேடுகளையும், பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த உளவியல் முறை ரசாயன முறை உயிரியல் முறை குறித்தும் விளக்கினார்.
மேலும் எனது மண் எனது நாடு பிரச்சாரத்தில் பார்த்தீனிய கலைச்செடியும் ஒரு இயற்கை உரமே அவற்றை மண்ணுக்கு எவ்வாறு உரமாக்குவது குறித்தும் விலக்கப்பட்டது. அதற்கான துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. மாணவர்கள் வரும் காலங்களில் இதுபோன்ற விஷத்தன்மை கொண்ட செடிகளை அகற்றுவோம் அவற்றை மண்ணுக்கு உரமாக்குவோம் என உறுதிமொழியேற்றனர்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர்கள் ஜமுனா, சிபிசபாஷ்யன், முதுநிலை தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் சத்திய சிவானந்த மூர்த்தி, தொழில்நுட்ப உதவியாளர் விமல் ராஜ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் கோபால கண்ணன், ஆசிரியர்கள் ஞானபிரகாசம், கீதா, கஸ்தூரி, கௌரி ஆகியோர் கண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக