கோடையிலும் மக்களின் தண்ணீர் பஞ்சம் போக்கிய கைப்பம்பு தற்போது தனிநபர் ஆக்கிரமிப்பால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அவலம், புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத செஞ்சி பேரூராட்சி நிர்வாகம்.
செஞ்சி பெரியகரம் வார்டு எண் 8 சுப்பு தெருவில் உள்ள கைப்பம்பு தற்பொழுது தனிநபரின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் பிடிக்க இயலாத நிலையில், வறட்சி காலத்திலும் வற்றாத குடிநீர் அப்பகுதி மக்களின் தண்ணீர் பஞ்சம் போக்கிய இந்த கைப்பம்பு ஆனால் தற்போது கேள்வி குறியாக உள்ளது.
இந்த பகுதியில் மின்மோட்டார் பழுதடைந்தாலோ, மின்சார தடை ஏற்பட்டாலோ இப்பகுதி மக்களின் ஒரே நீராதாரம் இந்த கை பம்ப் மட்டும் தான் எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் வார்டு எண் 8-ல் உள்ள குடிதண்ணீர் கைப்பம்பை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சரி செய்து தரவேண்டி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை?
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக