நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திராயன் 3 விண்கலம், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO புதிய வரலாற்று சாதனை படைத்துள்ள இந்தியா.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO ஜூலை 14 ல் ஸ்ரீஹரிஹோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஆய்வு மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து ரூ.615 கோடியில் உருவாக்கிய சந்திராயன் 3, எல் வி எம் 3 எம் 4 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னா் புவி வட்டப்பாதையில் இருந்து ஆகஸ்ட் 5 ல் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் 3 -யில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டா் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.
நிலவுக்கும் லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டுவரப்பட்டது. பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டா் உயரத்துக்கு லேண்டா் கொண்டுவரப்பட்டு சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.
பின்னர், அதிலுள்ள சென்சாா்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தோ்வு செய்யப்பட்டு லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டு இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறக்கியது.
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயங்கிய திட்ட இயக்குனர் விழுப்புரத்தை சேர்ந்த பழனிவேல் - ரமணி இவர்களின் மகன், வீர முத்துவேல் (42) விஞ்ஞானி.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக