விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திருநாகேஸ்வரர் திருக்கோயில் கிராம மக்களால் புணரமைக்கப்பட்டு இன்று (ஞாயிறு - 10/09/2023) மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து நாதஸ்வர மங்கள மேள தாளங்களுடன் சிவவாத்தியம் இசைக்க கும்பகலசங்கள் கடம்புறப்பாடடு நடைபெற்றது.
விழாவின் கருவான பக்தர்களின் விண்ணை முட்டும் சிவ சிவா என்ற கோசத்துடன் ராஜகோபுர விமானங்கள், பரிவார தெய்வங்கள் மற்றும் மூலவர் திரிபுரசுந்தரி, திருநாகேஸ்வரர் சிலைகளுக்கு திருக்குட நன்னீர் ஊற்றப்பட்டு தீப ஆராதனை ஏற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது.
இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஈசனும் அம்பாளும் ஊஞ்சல் சேவையும் அதனையொட்டி பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இத்திருக்குட நன்னீராட்டு விழாவில் திறளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக