விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு அமைச்சர் உதயநிதியை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் செப்டம்பர் -1 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரிஅம்மன் ஆலய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைச்சர் உதயநிதியை கண்டித்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலகக் கோரியும், விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் A.D.ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் எம். எஸ். ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாண்டியன், எத்திராஜ், மாவட்ட பொருளாளர் சத்யநாராயணன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஏழுமலை, கோகுல், மாவட்ட செயலாளர்கள் விஜயலட்சுமி, சந்திரலேகா, ஐடி பிரிவு ஸ்ரீரங்கன் மற்றும் மண்டல, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்ட 250 க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக