வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விழுப்புரம் அடுத்த அய்யூர் கிராமத்தில் விநாயகர் சிலைகளின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளுள் ஒன்றான விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. சதுர்த்தி அன்று வீடுகளில் புதிதாக களிமண் சிலைகள் வைத்து பூஜை செய்து பின்னர் சிலைகளை குளம் , கினறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பர். இவ்வாறு கரைப்பதனால் களிமண் சிலைகள் கரைந்து நீர்நிலைகளின் தரைப்பகுதியில் படிந்து எதிர் வரும் மழைக் காலங்களில் நீர்நிலைகளில் தேக்கி வைக்கப்படும் மழை நீர் எளிதில் வற்றிவிடாமல் பாதுகாக்கப்படுகிறது.
வினாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் வைத்து பூஜை செய்யும் சிறு சிறு விநாயகர் சிலைகள் களிமண்ணாலும், கோவில்கள், வீதிகள் உட்பட முக்கிய பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யும்
விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 8 அடி வரை நீர் நிலைகளில் எளிதில் கரையக்கூடிய வகையில் மரவள்ளி கிழங்கு, ஜவ்வரிசி, சவுக்கை குச்சி மற்றும் பயனற்ற பேப்பர்களை கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் விழுப்புரம் அடுத்த அய்யூர் கிராமத்தில் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
3 அடி முதல் 8 அடி வரை உள்ள வினாயகர் சிலைகள் ரூ. 1500/- முதல் ரூ. 24500/- வரை விற்பனை செய்யப்படுகிறது. சிவசக்தி விநாயகர், கமல விநாயகர், சிம்மவிநாயகர் உள்ளிட்ட பல்வேறு வகையான வினாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக