விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி மேற்கு ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு 6161 பனை விதைகள் நட திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 3000 பனை விதை நடும் நிகழ்ச்சி முகாம் செயலாளர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆரணி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் தவசீலன், என்எல்சி நடராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் பாக்கம் சங்கர், ராமச்சந்திரன், துத்திப்பட்டு கோவிந்தன், ஒன்றிய பொருளாளர் ஜான், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நவீன்ராஜா சந்தோஷ்குமார், ஊடக மைய துணை அமைப்பாளர் ராம்கி, நகர துணை செயலாளர்கள் தலித்மகிழ்வரசு, ஏகே.ஏழுமலை, முற்போக்கு மாணவர் கழக துணை அமைப்பாளர் பிரகாஷ், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக