Top News

செஞ்சி தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: 1500 பேருக்கு வங்கி பரிவர்த்தனை அட்டையினை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

செஞ்சி தொகுதியில் 1500 நபர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை பெருவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் போது திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனை நிறைவேற்றும் வகையில் இந்த ஆண்டு(2023) தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என பெயரிடப்பட்டு, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க மகளிர் உரிமை திட்டத்திற்கு ரூ.7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டமானது அண்ணா பிறந்தநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அண்ணா பிறந்த நாளான இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.

அந்தவகையில் செஞ்சி தொகுதி சார்பில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்க விழா செஞ்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா தலைமையில் தமிழக சிறுபான்மையியினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 1500 மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை வழங்கி சிறப்புரையாற்றிய அவர் தமிழ்நாடு முழுவதும் ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்துள்ளார்கள். ஒரே நேரத்தில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒரே கையெழுத்தினால் பலன் சென்று சேரும் வகையில் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5 இலட்சம் மகளிர் பயன்பெருவார்கள் என்றும் 

பெண்கள் வாழ்வாதாரம் உயர்வதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பெண்கள் உயர் கல்வி பெறுவதற்கு புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் மக்களை தேடி மருத்துவம் இல்லம் தேடிக் கல்வி போன்ற என்னற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் முதலமைச்சர் உலகத்திலேயே சிறந்த திட்டமாக பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக ஒரு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்ததை பெண்கள்வரவேற்று மகிழ்ச்சியுடன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன், வல்லம் அமுதார் ரவிக்குமார், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி,செஞ்சி வட்டாட்சியர் கார்த்திகேயன், மேல்மலையனூர் வட்டாட்சியர் முகமது அலி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் மற்றும் வருவாய் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை