மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு இடையே நடைபெற உள்ள தேசிய அளவிளான கைப்பந்து (Hand Ball) போட்டியில், தமிழ்நாடு அணிக்காக விளையாட கிராமப்புற பள்ளி மாணவிகள் தேர்வு!!

 

மத்திய பிரதேசத்தில் தேசிய அளவிளான கைப்பந்து (Hand Ball) போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாட கிராமப்புற பள்ளி மாணவிகள் தேர்வாகியுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளான அபிநயா மற்றும் சுமித்ராதேவி ஆகியோர் கைப்பந்து((HAND BALL) போட்டியில் கலந்துக் கொண்டு விளையாடி பல்வேறு வெற்றிகளைப் பெற்று மாவட்ட அளவிளான அணிக்கு தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் நடைப்பெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தனர்.

இதனிடையே இந்திய பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு குழுமம் சார்பாக(SGFI) 17-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு மாநில அளவிலான கைப்பந்து விளையாட்டுக்கான தேர்வு போட்டிகள் நாமக்கல் மாவட்டம் பாவை பொறியல் கல்லூரியில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சனிக்கிழமை நடைப்பெற்றது. இந்த போட்டி தேர்வில் சென்னை, திருச்சி கோவை, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மண்டலங்களில் இருந்து 72 பேர் கலந்துக் கொண்டர். நேற்று இறுதியாக 16 பேர் தேசிய அளவிளான போட்டிகளில் விளையாட தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் கடலூர் மண்டலத்திற்க்கு (கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், கரூர் உள்ளடக்கிய மாவட்டங்கள்) உட்பட்ட விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியான ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அபிநயா மற்றும் சுமித்ராதேவி ஆகிய இருவரும் தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த (அக்டோபர்) மாதம் மத்திய பிரதேசம் மாநிலம் சுஜல்பபூர் பகுதியில் தேசிய அளவில் நடைபெற உள்ள 17-வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தேசிய அளவிளான போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவிகளுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜாக்குலின் ரவிகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வகுமார், பிரேம் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், ஒரே பள்ளியில் பயிலும் இரண்டு கிராமப்புற பள்ளி மாணவிகள் தேசிய அளவிளான போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை