விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின் பேரில் இன்று விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி மற்றும் கோட்டகுப்பம் ஆகிய நான்கு உட்கோட்டங்களில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் பொதுமக்கள் புகார் மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் பொது மக்களிடமிருந்து இன்று ஒரு நாளில் 196 புகார் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட புகார் மனுக்களில் இன்றே149 புகார் மனுக்களின் மீது உடனடி விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. எஞ்சிய 47 மனுக்கள் மீது உரிய விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக