வல்லம் ஒன்றியத்தில் ரூ. 7.25 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள்! அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்!!

 

வல்லம் ஒன்றியத்தில் ரூ 7.25 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணி, ஒரு வழி தடத்தை இடைவழித் தடமாக அகலப்படுத்தி புதிய சாலை அமைப்பதற்கு அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வல்லம் ஒன்றியம் நாட்டார்மங்கலம்-தொண்டூர் மேல் ஒலக்கூர் வழி செல்லும் ஒரு வழித்தடத்தை இடைவழித் தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தும் பணிக்கும், மொடையூர் சாலை மண் நிலை படுத்துதல் பணிக்கும், நாட்டார்மங்கலம்-தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கும், ஜெயங்கொண்டான்- பேரணி சாலையை ஒரு வழித்தடத்தை இரு வழித்தடமாக அகலப்படுத்தி அதனை உறுதிப்படுத்தி புதிய தார் சாலை அமைப்பதற்கு நாட்டார்மங்கலம், புதுசொரத்தூர் ஊராட்சிகளில் பூமி பூஜை விழா  நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வல்லம் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரியம்மாள் மாணிக்கம், அசோக் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பக்தவச்சலம், கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு நாட்டார்மங்கலம்-தொண்டூர் சாலையை ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணிக்கு 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மொடையூர் சாலை மண் நிலைப்படுத்துதல் பணிக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாட்டார்மங்கலம்-தொண்டூர் சாலை பாலம் கட்டுதல் பணிக்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஜெயங்கொண்டான்-பேரணி சாலையை ஒரு வழி தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்தல் பணிக்கு 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் என 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் செய்வதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, இளம்வழுதி, நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர்கள் ஏழுமலை, சேகர், மாவட்ட கவுன்சிலர்கள் அன்பு செழியன், சசிகலா மோகனசுந்தரம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை