விழுப்புரம், திண்டிவனம் உட்கோட்ட காவல்துறை சார்பில், பட்டாசு கடை மற்றும் குடோன் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு!!

 

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் சுரேஷ் மற்றும் சுரேஷ் பாண்டியன் தலைமையில் இன்று பட்டாசு கடை மற்றும் பட்டாசு குடோன் உரிமையாளர்களை நேரில் அழைத்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதில் பட்டாசு கடை மற்றும் குடோன் உரிமையாளர்கள் அரசு வழிகாட்டிய நெறிமுறைகள் போதிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

பட்டாசு கடை மற்றும் குடோன் உரிமையாளர்கள் பதிவு செய்த வெடி மருந்து பொருட்களை விட அதிகமாக எடுத்து வரவும் அல்லது போதிய பாதுகாப்புகள் இல்லாமல் செயல்பட்டால் அவர்களது உரிமம் ரத்து செய்து கடை மற்றும் குடோன்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

சரியான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நல்ல முறையில் பண்டிகை காலத்தை சிறப்புடன் வழி நடத்த ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்:                               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை