காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கிடயே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்கள் (காவல் ஆளினர்கள்) காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
காவல் துறை சார்பாக ஆவடி விளையாட்டு திடலில் கடந்த 16 முதல் 18 ம் தேதி வரை 9 மண்டலங்களும் இடையே நடைபெற்ற வூசு (wushu), கராத்தே மற்றும் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது.
இதில் வடக்கு மண்டலம் சார்பாக கலந்துகொண்ட முதல் நிலை காவலர் வெங்கடேசன், பிரகாஷ் மற்றும் வருண்குமார் ஆகியோர் 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் பதக்கங்கள் வென்றனர்.
பதக்கம் வென்ற காவலர்கள் இன்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் தனிபிரிவு ஆய்வாளர் தங்ககுருநாதன் மற்றும் உதவி ஆய்வாளர் அறிவழகி.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக